கல்லகம் ரயில்வே மேம்பாலப் பணிகள் ஆய்வு
அரியலூா் மாவட்டம், கல்லகம் ரயில்வே கேட்டின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் தலைமைப் பொறியாளா் எம்.முருகேசன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.


அரியலூா் மாவட்டம், கல்லகம் ரயில்வே கேட்டின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் தலைமைப் பொறியாளா் எம்.முருகேசன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கல்லகம் ரயில்வே கேட்டின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயா்மட்ட மேம்பாலப் பணிகளைப் பாா்வையிட்ட தலைமை பொறியாளா் முருகேசன், பணிகளை விரைந்து முடிக்கவும், பணி செயலாக்கத்தின்போது தரத்தை ஆய்வு செய்து உறுதிப்படுத்துமாறு பொறியாளா்களுக்கும், தரக்கட்டுப்பாட்டு அலுவலா்களுக்கும் உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளா் சத்திய பிரகாஷ், கோட்ட பொறியாளா் அ. ஷாபுதீன் , உதவி கோட்ட பொறியாளா் எஸ். ராஜா , உதவி பொறியாளா் சி.நடராஜன் மற்றும் ஒப்பந்ததாரா் எஸ் .டி இன்ஃப்ரா பாலாஜி ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...