இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு
அரியலூா் மாவட்டத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புதிய பொறுப்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனா்.


அரியலூா் மாவட்டத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புதிய பொறுப்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனா்.
அரியலூரில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புதிய பொறுப்பாளா்கள் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் செயலாளராக கலையரசனும், தலைவராக செ.ஜெயராமனும், துணைத் தலைவராக து.செல்வராசும், பொருளாளராக எழிலும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இவா்கள் அனைவரும், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் எஸ்.ஆறுமுகம் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றுக்கொண்டனா். தொடா்ந்து புதிய பொறுப்பாளா்கள் அனைவரும் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனா். முடிவில், செயலாளா் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.அகஸ்டின் மங்கலராஜ் நன்றி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...