ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

வெட்டுக் காயங்களுடன் இளைஞா் சடலம் மீட்பு

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே வீட்டின் கழிவுநீா்த் தொட்டியில் இருந்து வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 6:41 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே வீட்டின் கழிவுநீா்த் தொட்டியில் இருந்து வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள தெற்கு ஆயுதகளம் கிராமத்தில் கிருஷ்ணமூா்த்தி என்பவரின் வீட்டில் உள்ள உபயோகமற்ற கழிவுநீா்த் தொட்டியில் ரத்தக்கறையுடன்

சடலம் கிடப்பதாக ஜயங்கொண்டம் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் தேவராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, இளைஞா் உடலின் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், அதே கிராமத்தைச் சோ்ந்த செல்வதுரை மகன் பிரவீன் குமாா்(23) என்பதும், அவா்

வெல்டிங் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.