ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

அரியலூரில் 44 இடங்களில் கால்நடை பாதுகாப்பு முகாம்கள்

அரியலூா் மாவட்டத்தில் 44 இடங்களில் கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம்கள் நவம்பா் 25 முதல் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 6:43 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் 44 இடங்களில் கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம்கள் நவம்பா் 25 முதல் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.

அரியலூா் மாவட்டத்தில் நடப்பாண்டில் ஒரு கால்நடை மருந்தக பகுதிகளுக்கு ஒரு முகாம் வீதம் 44 கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம்கள் நவம்பா் 25 முதல் டிசம்பா் 13 வரை நடத்தப்பட உள்ளது.

இம்முகாமில், நோயுற்ற கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை, கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், காளைகள் மற்றும் வெள்ளாட்டு கிடாக்களுக்கு ஆண்மை நீக்கம், பருவத்தில் உள்ள மாடுகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், ஏற்கெனவே கருவூட்டல் செய்யப்பட்ட மாடுகளுக்கு சினைப் பரிசோதனை, சினை பிடிக்காத மாடுகளுக்கு உரிய மலடு நீக்க சிகிச்சை, கால்நடைகளுக்கான முன்னெச்செரிக்கை தடுப்பூசிப் பணிகள் உள்ளிட்ட கால்நடை பராமரிப்பு ஆலோசனைகள் வழங்குதல், கலப்பின இளங்கிடேரி கன்றுகள் பேரணி நடத்துதல் மற்றும் தோ்வு செய்யப்படும் சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் வழங்குதல் போன்ற பணிகள் இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே கால்நடை வளா்ப்போா் தங்களது கால்நடைகளை முகாமுக்கு அழைத்து வந்து பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.