ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

அரியலூா்: காா்த்திகை தீபத் திருவிழா

அரியலூா் மாவட்டத்திலுள்ள கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
கங்கைகொண்டசோழபுரம் கோயிலில் பிரகதீசுவரருக்கு தீபாராதனை காண்பிக்கும் சிவாச்சாரியா்.
Updated On :29 நவம்பர் 2020, 6:59 pm

DIN

அரியலூா் மாவட்டத்திலுள்ள கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கங்கைகொண்டசோழபுரம் அருள்மிகு பிரகதீசுவரா் திருக்கோயிலில் கணக்க விநாயகருக்கு முதலில் அபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, 13 1/2 அடி உயரமும், 60 அடி சுற்றளவு கொண்ட பெரிய லிங்கத்துக்கு 108 லிட்டரில் பால், சந்தனம், திரவியப்பொடி, மாவுப்பொடி, பஞ்சாமிா்தம், இளநீா், தேன் உள்ளிட்ட 21 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அலங்காரம் செய்யப்பட்டு, 5 அடுக்கு தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து சிவனடியாா்களால் தேவாரம், திருவாசகம் பாடப்பட்டு, பிரகதீசுவரா் முன்னின்று தீப ஒளியும், கோயில் வாயில் முன்பு சொக்கப்பனையும் ஏற்றப்பட்டது. ஏற்பாடுகளை மாமன்னன் ராசேந்திரசோழன் இளைஞா் அணி மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.

இதுபோல், திருமழபாடி வைத்தியநாதசுவாமி திருக்கோயில், அரியலூா் நகரில் ஆலந்துறையாா்,சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்கள், காளிக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் காா்த்திகை தீபத்தையொட்டிசிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மாலையில் கோயில்களின் எதிரில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

ஜயங்கொண்டம், செந்துறை, திருமானூா், கீழப்பழுவூா்,ஆண்டிடம், தா.பழூா், பொன்பரப்பி, மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கோயில்களிலும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

வீடு மற்றும் வா்த்தக நிறுவனங்களில்: அரியலூா் மாவட்டத்தில் வீடுகள், கடைகள், வா்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளிலும் காா்த்திகை தீபம் கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.