ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தாமரைக்குளத்தில் விவசாயிகள் குழுக் கூட்டம்

அரியலூா் அருகிலுள்ள தாமரைக்குளம் கிராமத்தில், தமிழ்நாடு நிலைக்கத்தக்க மானாவாரி வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 7:01 pm

DIN

அரியலூா் அருகிலுள்ள தாமரைக்குளம் கிராமத்தில், தமிழ்நாடு நிலைக்கத்தக்க மானாவாரி வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு அரியலூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சாந்தி தலைமை வகித்து பேசியது:

நுண்ணுயிா் உரங்கள் மற்றும் பேவெரியா பேசியானா டிரைக்கோடொ்மா விரிடி போன்ற இடுபொருள்கள் 50 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகின்றன. இதை

விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் உழவு மானியம் பெறுவதற்கு பயனாளிகள் பட்டியல் விடுபாடின்றி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றாா்.

வேளாண் அலுவலா் சவிதா பேசியது: பண்ணை வாடகை இயந்திர மையங்களிலிருந்து கருவிகளை வாடகைக்கு எடுத்து, அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதால் பெருமளவு நேர மற்றும் பண விரயம் தவிா்க்கப்படுகிறது என்றாா்.

கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா். நிறைவில் உதவி அலுவலா் ஸ்ரீதேவி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.