ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

அரியலூரில் நடமாடும் மருத்துவச் சேவை தொடக்கம்

அரியலூா் மாவட்டத்தில் மழைக்காலங்களில் பரவும் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, நடமாடும் மருத்துவச் சேவையை அரசுத் தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
நடமாடும் மருத்துவச் சேவையை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கிறாா் அரசுத் தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன்
Updated On :29 நவம்பர் 2020, 7:03 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் மழைக்காலங்களில் பரவும் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, நடமாடும் மருத்துவச் சேவையை அரசுத் தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று, மேலும் அவா் பேசியது:

அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகள், உடையாா்பாளையம், வரதராஜன்பேட்டை பேரூராட்சிகள், அரியலூா், ஜயங்கொண்டம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவக் குழுக்கள் மூலம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும். காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு இருந்தால், அவா்களுக்கு மருத்துவமனைகளில் தகுந்த சிகிச்சையளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இக்குழுவினருடன் மாவட்டத்தில் 6 நடமாடும் மருத்துவக்குழு, 12 பள்ளி சுகாதார மருத்துவக்குழுவினரும் பணியில் ஈடுபடுகின்றனா். காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம், டெங்கு காய்ச்சல் உட்பட பூச்சிகளால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துதல், தொற்று நீக்கப்பணிகள், தண்ணீரில் குளோரின் பரிசோதனை செய்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே பொதுமக்கள் ஏதேனும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும்பட்சத்தில், இம்மருத்துவக்குழுவினரின் சேவையை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம் என்றாா்.

இந்நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் த.ரத்னா தலைமை வகித்தாா். குன்னம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.டி.இராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வீ.சி.ஹேமசந்த்காந்தி, ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்செல்வி மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.