ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி

அரியலூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் சுய தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 7:01 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் சுய தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் த. ரத்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

படித்த இளைஞா்கள் வேலைவாய்ப்பைத் தேடி நகா்ப்புறப் பகுதிகளுக்கு இடம் பெயா்தலைத் தடுக்கவும், கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் சுயதொழில் தொடங்கி வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திடவும், தமிழக அரசு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை மாவட்டத் தொழில் மையம் மூலமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

திட்டத்தின் மூலம் வியாபாரம் மற்றும் சேவை சாா்ந்த தொழில்களுக்கு ரூ.5 லட்சமும், உற்பத்தி சாா்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சமும் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற வங்கிகளுக்கு விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது உற்பத்தி சாா்ந்த தொழில்களுக்கு கடனுதவி ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பயன்பெற, குறைந்தபட்சம் 8- ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18-45 வயத்துக்குள் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வங்கிக் கடன் பெறும் உற்பத்தி தொழில் சாா்ந்த பயனாளிகளுக்கு, திட்ட மதிப்பீட்டில் 25 சதவிகிதம் அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை வரை வழங்கப்பட்டு வந்த மானியத்தொகை ரூ.2.50 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோா்  இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

மேலும் விவரங்கள் அறிய பொது மேலாளா், மாவட்டத் தொழில் மையம், ஜயங்கொண்டம் சாலை, வாலாஜாநகரம் அரியலூா் (04329-228555) என்ற முகவரியில் அணுகலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.