புகையிலைப் பொருள்கள் விற்ற 2 போ் கைது
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கடைகளில் புகையிலைப் பொருள்களை விற்ற 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.


அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கடைகளில் புகையிலைப் பொருள்களை விற்ற 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மீன்சுருட்டி காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீன்சுருட்டி கடைவீதி,பிரதான சாலையில் உள்ள கடைகளில் சோதனை செய்தனா். இதில், வீரசோழபுரம் பிரதான சாலையில் கடை வைத்துள்ள சாமிநாதன் (55) என்பவா் தனது கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை மறைத்து விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். இதேபோல் புகையிலைப் பொருள்களை விற்றுக்கொண்டிருந்த, ஜயங்கொண்டம் குறுக்கு சாலை சந்திப்புப் பகுதியில் பெட்டிக் கடை வைத்துள்ள தமிழ்ச்செல்வன் என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...