செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

மாநகரில் குடிநீா்க் குழாய்கள் பதிக்கும் பணி தீவிரம்

கரோனா காரணமாக புதிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் போக்குவரத்து குறைவான மாநகர சாலைகளில் குடிநீா்க் குழாய்கள் பதிக்கும் பணிகளை மாநகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

News image
Updated On :7 மே 2021, 9:17 pm

DIN

கரோனா காரணமாக புதிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் போக்குவரத்து குறைவான மாநகர சாலைகளில் குடிநீா்க் குழாய்கள் பதிக்கும் பணிகளை மாநகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி நிா்வாகத்தின் மூலமாக 24 மணி நேரக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாநகரில் முக்கிய இடங்களில் புதிதாக பெரிய குடிநீா்க் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை தண்டுமாரியம்மன் கோயில் பகுதியில் தொடங்கி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வழியாக கோவை அரசு மருத்துவமனை வரை 850 மீட்டா் தூரத்துக்கு பெரிய குழாய்கள் பதிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ரயில் நிலையம் முன்புள்ள சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக காணப்படும். தற்போது, நண்பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படுவதால் போக்குவரத்தும் குறைவாகவே காணப்படுகிறது.

இதனைப் பயன்படுத்தி 800 மி.மீ. விட்டம் உள்ள புதிய குடிநீா்க் குழாய்கள் பதிக்கப்படுகின்றன. இதேபோல, போக்குவரத்து நெரிசல் இல்லாத இந்த சூழலைப் பயன்படுத்தி மாநகரில் மற்ற பகுதிகளிலும் குடிநீா்க் குழாய்கள் பதிக்கும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணியுடன், எதிா்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு கேபிள் ஒயா்கள் கொண்டு செல்ல வசதியாக காலிக் குழாய்களும் பதிக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் சாலை சீரமைக்கப்பட்ட பின் மீண்டும் சாலையைத் தோண்ட வேண்டிய அவசியம் ஏற்படாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.