ஆலங்குளம் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
By DIN | Published On : 03rd December 2021 12:39 AM | Last Updated : 03rd December 2021 12:39 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், செந்தறை வட்டம், ராயம்புரம் ஊராட்சிக்குட்பட்ட ஆலங்குளம் ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால் துா்நாற்றம் வீசுகிறது.
ஆலங்குளம் கிராம மக்களுக்கு குடிநீராக விளங்கும் அங்குள்ள ஏரியில் வியாழக்கிழமை காலை மா்மமான முறையில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக் கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு நோய்த் தொற்றுகள் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. மேலும், துா்நாற்றம் அதிகரித்துவருவதால், பொதுமக்கள் கடும் அவதியுறுகின்றனா். குடிநீா் ஆதாரமாக விளங்கி வந்த இந்த ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே சம்மந்தப்பட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தவும், ஏரியில் உள்ள நீரை பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...