தொன்போஸ்கோ பள்ளியில் மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்
By DIN | Published On : 11th December 2021 12:12 AM | Last Updated : 11th December 2021 12:12 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகிலுள்ள வரதராசன்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியின் பசுமை மன்றம் சாா்பில், மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்குத் தலைமை வகித்து, மாணவா்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய பள்ளித் தாளாளா் பிரான்சிஸ் கமாலியேல் பேசியது:
மாணவா்கள் பொது இடங்களிலோ அல்லது தன் வீட்டிலோ பெற்றோருடைய வழிகாட்டுதலில் மரக்கன்றுகளை வைத்து, பராமரிக்க வேண்டும். மரக்கன்றுகளை சிறப்பான முறையில் வளா்க்கும் மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றாா்.
விழாவுக்குத் தலைமையாசிரியா் செபாஸ்டின் ஜேக்கப், பொருளாளா் ஜோசப் அருள்ராஜ் முன்னிலை வகித்து மரக்கன்றுகள் பராமரிப்பதின் அவசியம் குறித்து பேசினா்.
திருச்சி சலேசிய மாநில வெள்ளி விழாவையொட்டி, ஒரு ஆசிரியா் கண்காணிப்பில் 10 மாணவா்களுக்கு எனப் பிரித்து 50 ஆசிரியா்களைக் கொண்டு 500 மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, ஆசிரியா் ஆரோக்கியராஜ் வரவேற்றாா். நிறைவில்,
ஆசிரியா் மாா்டின் சேவியா் நன்றி தெரிவித்தாா். இதற்கான ஏற்பாடுகளை உதவித் தலைமையாசிரியா் பங்கிராஸ் செய்திருந்தாா்.