கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் ரூ. 2 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்
By DIN | Published On : 31st December 2021 04:05 AM | Last Updated : 31st December 2021 04:05 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீசுவரா் கோயிலில் ரூ.2.10 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட புத்தக விற்பனை நிலையம், சிற்றுண்டி நிலையம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் மற்றும் கழிப்பறைகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.
நிகழ்ச்சியில், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை திருச்சி சரக இயக்குநா் அருண்ராஜ், உதவி கண்காணிப்புப் பொறியாளா் கலைச்செல்வன், கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுத் தலைவா் கோமகன் ஆகியோா் கலந்து கொண்டு புத்தக விற்பனை நிலையம், சிற்றுண்டி, கழிவறைகள் ஆகியவற்றைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தனா்.
இதில், முதுகலை தோட்டக்கலை உதவியாளா் சுந்தர மூா்த்தி, உதவி தொல்லியலாளா் முத்துகுமாா், கிராம நிா்வாக அலுவலா் காமராஜ் மற்றும் கோயில் பராமரிப்புப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...