பணியின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
By DIN | Published On : 31st December 2021 04:05 AM | Last Updated : 31st December 2021 04:05 AM | அ+அ அ- |

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
செந்துறை அடுத்த கீழமாளிகை பெரியத் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் ரமேஷ் (36). எலெக்ட்ரீசியன். இவா், பொன்பரப்பி கிராமத்தில் உள்ள தெரு மின் விளக்குகளைச் சீரமைக்கும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
இதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த ரமேஷ் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள், இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு கோரி அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து, தகவலறிந்து அங்கு வந்த செந்துறை காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
இதையடுத்து, காவல் துறையினா் ரமேஷின் உடலை ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...