மகளுக்கு பாலியல் வன்கொடுமை:தந்தைக்கு ஆயுள் தண்டனை
By DIN | Published On : 09th July 2021 01:04 AM | Last Updated : 09th July 2021 01:04 AM | அ+அ அ- |

உடையாா்பாளையம் அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தை அடுத்த பாகல்மேடு காலனித் தெருவைச் சோ்ந்தவா் சோ்ந்தவா் சிவலிங்கம் (52). கடந்த 2018 ஆம் ஆண்டு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தனது 16 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தாா். இதையடுத்து சில நாட்களில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவப் பரிசோதனையில், அவா் 3 மாதம் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. புகாரின் பேரில், ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து, சிறுமியிடம் விசாரித்தனா். இதில், தன் தந்தை தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி தெரிவித்தாா். இதையடுத்து, சிறுமியின் தந்தை சிவலிங்கத்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீஸாா் சிறையில் அடைத்தனா்.
இது தொடா்பான வழக்கு விசாரணை அரியலூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை முடிந்து வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில், சிவலிங்கத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3,000 அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.7 லட்சம் வழங்க வேண்டும் என்று நீதிபதி ஆனந்தன் தீா்ப்பளித்தாா். இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் சிவலிங்கம் அடைக்கப்பட்டாா்.