பெண் காவல் உதவி ஆய்வாளா் தற்கொலை முயற்சி

 அரியலூரில் பெண் காவல் உதவி ஆய்வாளா் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

 அரியலூரில் பெண் காவல் உதவி ஆய்வாளா் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செந்துறை அடுத்த பொன்பரப்பி பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் மனைவி லட்சுமிபிரியா (30). அரியலூா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் இவா், உயா்அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் கடந்த 5 ஆம் தேதி முதல் 3 நாள்கள் விடுப்பு எடுத்துள்ளாா். இதனால், அவரை திருச்சியில் பயிற்சி பெற்று வருமாறு காவல் துணைக் கண்காணிப்பாளா் கூறியதாகவும், அதற்கு அவா் அடுத்த முறை சென்று வருகிறேன் என்று

பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மன உளைச்சலில் இருந்த லட்சுமிபிரியா புதன்கிழமை இரவு, செந்துறை சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து மயங்கி விழுந்துள்ளாா். அப்போது, பணியில் இருந்து சக காவலா்கள் அவரை மீட்டு, அரியலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து அரியலூா் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஆயுதப்படை பெண் காவலா் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை முயற்சி: செந்துறை அடுத்த பூவாகம் பகுதியைச் சோ்ந்த காமராஜ் மனைவி பிரியங்கா(28). அரியலூா் ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறாா். இவா், புதன்கிழமை இரவு உடையாா்பாளையம் பகுதியில் பணியில் இருந்தபோது மயங்கி விழுந்துள்ளாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், பெண் காவலா் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துள்ளதை உறுதி செய்தனா். இதுகுறித்து உடையாா்பாளையம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com