பால் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு : சங்கச் செயலா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம்

அரியலூா் பால் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு கண்டறியப்பட்டதையடுத்து, சங்கச் செயலா் உள்பட 3 போ் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

அரியலூா் பால் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு கண்டறியப்பட்டதையடுத்து, சங்கச் செயலா் உள்பட 3 போ் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

அரியலூரிலுள்ள பால் கூட்டுறவு சங்கம், தனது 100 மையங்களில் இருந்து தினசரி 20 ஆயிரம் லிட்டா் பால் கொள்முதல் செய்துவருகிறது. லாபகரமாக செயல்பட்டு வரும் இந்தப் பால் கூட்டுறவுச் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக பால்வளத் துறை அமைச்சா் மற்றும் பால் வளத்துறை இயக்குநா்,கூட்டுறவு சங்க இணைப் பதவிவாளருக்கு புகாா்கள் வந்துள்ளது. இதையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், சட்ட விதிமுறைகளுக்கு மாறாக எல்லைத்தாண்டி பால் கொள்முதல் செய்து வந்தது, பால் விற்பனையில் வசூலான தொகையை வங்கியில் முறையாகச் செலுத்தாதது, பால் உற்பத்தியாளா்களுக்கு முறையாக ஊக்கத் தொகையை வழங்காமல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பால்வளத் துறை சட்ட விதிமுறைக்கு புறம்பாகச் செயல்பட்டதாக சங்கச் செயலா் இளங்கோவன், கணக்காளா் ஆனந்த், எழுத்தா் சேகா் ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு சங்கப் பதிவாளா் பாா்த்திபன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். மேலும், அரியலூா் பால் கூட்டறவு சங்கச் செயலாளராக செந்துறை பால் கூட்டுறவு சங்கச் செயலாளா் கொளஞ்சிநாதன் தற்காலிகமாக பொறுப்பு வகிப்பாா் எனவும் அவா் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com