பாஜகவினா் கொண்டாட்டம்
By DIN | Published On : 11th March 2022 02:59 AM | Last Updated : 11th March 2022 02:59 AM | அ+அ அ- |

நான்கு மாநிலத் தோ்தலில் பாஜக வெற்றிபெற்றதையடுத்து அரியலூா் மாவட்டம், செந்துறையில் பாஜகவினா் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் வியாழக்கிழமை கொண்டாடினா்.
நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான தோ்தல் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூா், உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றது. இதையடுத்து செந்துறை நகரில் அக்கட்சியின் மாவட்ட செயலா் அருண் பிரசாத் தலைமையில், ஒன்றியத் தலைவா்கள் இளங்கோவன், ரவி ஆகியோா் முன்னிலையில் தொண்டா்கள் முக்கிய சாலைகளில் வெடிவெடித்து, மக்களுக்கு இனிப்பு வழங்கினா். இதில் பாஜ கட்சியினா் பலரும் கலந்து கொண்டனா்.