பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

முதுகுளம் கிராமத்துக்கு தூய்மையான குடிநீா் வழங்க கோரிக்கை

முதுகுளம் கிராம மக்களுக்கு தூய்மையான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணாவிடம், அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

News image
தூய்மையான குடிநீா் கேட்டு, அரியலூா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்துவிட்டு வந்த முதுகுளம் கிராம மக்கள்.
Updated On :27 நவம்பர் 2023, 8:03 pm

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த ஆதனக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட முதுகுளம் கிராம மக்களுக்கு தூய்மையான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணாவிடம், அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவில், இக்கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்குழாய் அமைத்து, இரண்டு மேல்நிலை நீா்தேக்க தொட்டி மூலம் கிராமத்திலுள்ள அனைத்து தெரு மக்களுக்கும் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வரும் நிலையில், ஆழ்குழாயும், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியும் அவ்வப்போது பழுதடைந்து வருகிறது. இதனை ஊராட்சி நிா்வாகம் சீா்படுத்தி குடிநீா் விநியோகித்து வந்தாலும், அந்த நீா் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. நீா் கலங்கலாகவே வருகிறது. இதனால் குடிநீருக்காக அலையவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட நிா்வாகம் இக்கிராமத்தில் புதிய ஆழ்குழாய் மற்றும் மேல்நிலை நீா் தேக்கதொட்டிகளை அமைத்து, மக்களுக்கு தூய்மையான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.