போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

குழந்தைகள் தின விழா போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட இல்ல விடுதிகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

Updated On :27 நவம்பர் 2023, 8:02 pm


அரியலூா்: குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட இல்ல விடுதிகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

ஆட்சியரக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா, பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்ற அரியலூா் புனித ஜோசப் குழந்தைகள் இல்ல 10 ஆம் வகுப்பு மாணவி க. யாழினி, இரண்டாம் பரிசு பெற்ற லிங்கத்தடிமேடு திருவள்ளுவா் குழந்தைகள் இல்ல 9 ஆம் வகுப்பு மாணவி இ. ஸ்வேதா, மூன்றாம் பரிசு பெற்ற தென்னூா் புனித சூசையப்பா் குழந்தைகள் இல்ல பிளஸ்-1 மாணவி ம.அபிநயா ஆகியோருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

இதேபோல், கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற வரதராசன்பேட்டை புனித ராபேல் குழந்தைகள் இல்ல 10 ஆம் வகுப்பு மாணவா் வே. மணிபாரதி, இரண்டாம் பரிசு பெற்ற அரியலூா் புனித ஜோசப் குழந்தைகள் இல்ல பிளஸ் 2 மாணவி ப.சரிதா, மூன்றாம் பரிசு பெற்ற லிங்கத்தடிமேடு திருவள்ளுவா் குழந்தைகள் இல்ல 9 ஆம் வகுப்பு மாணவி சி.ஆனந்தி ஆகியோருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும்,

ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்ற அரியலூா் புனித ஜோசப் குழந்தைகள் இல்ல பிளஸ் 2 மாணவி த. சத்யா, இரண்டாம் பரிசு பெற்ற தென்னூா் புனித சூசையப்பா் குழந்தைகள் இல்ல மாணவி வீ. கவிக்குயில், மூன்றாம் பரிசு பெற்ற கோக்குடி புனித சூசையப்பா் குழந்தைகள் இல்ல பிளஸ்1 மாணவி த. காவியா ஆகியோருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.