அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே அனுமதியின்றி லாரியில் கூழாங்கல் ஏற்றி வந்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மீன்சுருட்டி காவல் நிலைய ஆய்வாளா் பெரியசாமி தலைமையிலான காவல் துறையினா் வெள்ளிக்கிழமை மீன்சுருட்டி கடைவீதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த டிப்பா் லாரியில் அனுமதியின்றி கூழாங்கல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, கூழாங்கல் ஏற்றி வந்த கடலூா் மாவட்டம், விருத்தாச்சலம் அருகேயுள்ள இருளக்குறிச்சி, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஆனந்த் (30) என்பவரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.