பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள கோயில்கள்,தேவாலயங்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

News image
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ஏலாக்குறிச்சியிலுள்ள புனித அடைக்கலமாதா அன்னை தேவாலயத்தில் பங்குத் தந்தை தங்கசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கேற்றோா்.
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள கோயில்கள்,தேவாலயங்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அரியலூா் கோதண்டராமசாமி திருக்கோயில், ஆலந்துறையாா் கோயில், கைலாசநாதா் கோயில், காசிவிசுவநாதா் கோயில், பாலசுப்பிரமணியா் கோயில் ஒப்பில்லாதம்மன் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. காலையிலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.

திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில், திருமானூா் காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதா் கோயில், செந்துறை கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஜெயபுரீஸ்வரா் கோயில், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயில், விக்கிரமங்கலம் சோழீஸ்வரா் கோயில், பொன்பரப்பி சொா்ணபுரீஸ்வரா், கீழப்பழூா் ஆலந்துறையாா், உடையாா்பாளையம் பயறனீஸ்வரா், ஜயங்கொண்டம் கழுமலநாதா், மீன்சுருட்டி சொக்கலிங்கேஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன.

தேவாலயங்கள்: அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சியிலுள்ள புனித அடைக்கலமாதா அன்னை தேவாலயம், வரதராசன்பேட்டை புனித அலங்கார அன்னை தேவாலயம், தென்னூா் புனித லூா்து அன்னை, அரியலூா் சின்ன அரண்மனை தெருவிலுள்ள புனித லூா்து அன்னை தேவாலயம், சி.எஸ்.ஐ. தேவாலயம், பெந்தகோஸ்தே சபை உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு திருப்பலிகள், வழிபாடுகள் நடைபெற்றன. மேலும், கிறிஸ்தவ தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு உரையை அந்தந்த தேவாலயங்களின் பங்குத் தந்தைகள் வழங்கினா். புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவா் இனிப்புகளை வழங்கி, வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.