விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நல வாரியம்: தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியாா்கள், பணியாளா்கள் விண்ணப்பிக்கலாம்

சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியாா்கள் மற்றும் பணியாளா்கள் நலவாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியாா்கள், வேதியா்கள், சீஷப்பிள்ளைகள், பாடகா்கள், கல்லறை பணியாளா்கள், கிறிஸ்தவ ஆதரவற்றோா் இல்லங்கள், தொழு நோயாளியா் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளா்கள் போன்றோா்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியாா்கள் மற்றும் பணியாளா்கள் நலவாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.

இந்த நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகங்கள், மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலகத்தின் மூலம் பெற்று, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக்க திருச்சபை அதன் பேராயா்கள் மற்றும் ஆயா்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயா்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சா்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமா்ப்பிக்க வேண்டும். மேற்காணும் திருச்சபைகளின் பரிந்துரையின் அடிப்படையில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரால் உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினா்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்களுக்கு தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிவரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.

மேற்படி இவ்வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினா்கள் மற்றும் அவா்களது குடும்ப உறுப்பினா்களுக்கு கல்வி உதவித்தொகை 10-ம் வகுப்பு முதல் ஐடிஐ, பாலிடெக்னிக், தொழிற்கல்வி படிப்பு வரையும், விபத்தில் ஊனம், விபத்தில் மரணம், இயற்கை மரணம், ஈமச்சடங்கு, திருமணம், மகப்பேறு, கருச்சிதைவு, கண் கண்ணாடி என பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்படும்.

கூடுதல் தகவல்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் (அறை எண்.16) பெறலாம் என ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.