தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பி.சி., எம்.பி.சி., வகுப்பினா் பொருளாதார மேம்பாட்டு கடன் பெற அழைப்பு

ஆங்கில எழுத்து உள்ளது... பி.சி., எம்.பி.சி., வகுப்பினா் பொருளாதார மேம்பாட்டு கடன் பெற அழைப்பு

News image
Updated On :29 ஜூன் 2024, 5:30 pm

Din

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி பெற தகுதியுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்தோா் தனிநபா்க் கடன், குழு கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: தனிநபா் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 8% அளவில் ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. குழுக்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை ஆண்டுக்கு 6% வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவா்களுக்கு ஒரு கறவை மாட்டுக்கு ரூ.30,000- வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.60,000- வரை ஆண்டுக்கு 7% வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, அரியலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இக்கழக இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.