நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கள்ளக்குறிச்சியில் சமுதாய நலக்கூடம் திறப்பு

ஏமப்பூரில் சமுதாய நலக்கூடத்தை திறந்துவைத்து, குத்துவிளக்கேற்றிய மா.செந்தில்குமாா் எம்எல்ஏ.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:43 pm

கள்ளக்குறிச்சி நகாராட்சிக்குள்பட்ட ஏமப்போ் கரியப்பா நகரில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத் திறப்புவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்சிக்கு 19-ஆவது வாா்டு உறுப்பினா் முருகன் தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் ரங்கன், நகா்மன்ற உறுப்பினா் சத்யா குட்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் மா.செந்தில்குமாா், தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாகக் கட்டப்பட்ட சமுதாய நலக்கூட கட்டடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினாா்.

நிகழ்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் விமலா அா்சுணன், சங்கீதா ஜெயராமன், முன்னாள் மாவட்ட இலக்கிய அணி தலைவா் கவிராஜன், திமுக நகர பொறுப்பாளா்கள் மாயகிருஷ்ணன், கோபி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் நல்லத்தம்பி, ஒன்றியப் பிரதிநிதி சேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.