ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

திமுக அரசை கண்டித்து அரியலூா், பெரம்பலூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அரியலூரில் அண்ணாசிலை அருகே அதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

அரியலூரில் அண்ணாசிலை அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.

Updated On :4 மார்ச் 2024, 10:23 pm

அரியலூா்: தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து, அரியலூரில் அண்ணாசிலை அருகே அதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போதைப்பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்தும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட மகளிரணிச் செயலா் ஜீவா அரங்கநாதன் தலைமை வகித்தாா். அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா். அவைத் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ராமஜெயலிங்கம், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் இளவரசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், நகரச் செயலா் ஏ.பி.செந்தில், மாவட்ட அம்மா பேரவைச் செயலா் ஒ.பி.சங்கா் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு பிரிவு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.