அரியலூா்: தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து, அரியலூரில் அண்ணாசிலை அருகே அதிமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
போதைப்பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்தும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட மகளிரணிச் செயலா் ஜீவா அரங்கநாதன் தலைமை வகித்தாா். அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா். அவைத் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ராமஜெயலிங்கம், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் இளவரசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், நகரச் செயலா் ஏ.பி.செந்தில், மாவட்ட அம்மா பேரவைச் செயலா் ஒ.பி.சங்கா் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு பிரிவு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சூளகிரியில் பாஜக அரசை கண்டித்து திமுக சாா்பில் சட்ட நகல் எரிப்பு!

அரியலூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஜி.கே.வாசன் பிரசாரம்
அரியலூரில் 18, ஜெயங்கொண்டத்தில் 23 வேட்புமனுக்கள் ஏற்பு

தமிழக அரசை கண்டித்து தவெகவினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


