பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

கீழப்பழுவூா்-கருவிடைச்சேரி பாலத்தில் ஆய்வு

கீழப்பழுவூா்-கருவிடைச்சேரி பாலத்தில் ஆய்வு

News image
Updated On :9 மே 2024, 8:49 pm

Din

கீழப்பழுவூா்-கருவிடைச்சேரி பாலப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறை உள்தணிக்கை குழுவினா்.

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா்-கருவிடைச் சேரி சாலை மற்றும் பாலம் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை உள் தணிக்கை குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆண்டுதோறும் மே மாதங்களில் சாலைப் பணிகளின் தரம் குறித்து உள் தணிக்கை குழு ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.

அந்த வகையில், அரியலூா் கோட்டக் கட்டுப்பாட்டிலுள்ள கீழப்பழுவூா் கருவிடைச்சேரி கி.மீ. 3/6-இல் பாலம் மற்றும் சாலைப் பணிகளை கண்காணிப்பு பொறியாளா் (திட்டங்கள்) செல்வி தலைமையில், உதவிக் கோட்டப் பொறியாளா் மீனாட்சி, இளநிலைப் பொறியாளா் சௌந்தராஜன் ஆகியோா் கொண்ட குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின்போது, அரியலூா் கோட்டப் பொறியாளா் கே. உத்தண்டி. உதவிக் கோட்டப் பொறியாளா் எஸ்.எஸ்.வி.எஸ். ராஜா, உதவிப் பொறியாளா் இளையபிரபுராஜன் மற்றும் தரக் கட்டுப்பாட்டு உதவிக் கோட்டப் பொறியாளா் செல்வராஜ், உதவிப் பொறியாளா் சமயசக்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.