சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

News image

பங்குச்சந்தை - ANI

Updated On :30 மார்ச் 2026, 6:16 am

வாரத்தின் முதல் நாளான இன்று(மார்ச் 30) பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 72,565.22 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 989.71 புள்ளிகள் குறைந்து 72,603.89 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. முன்னதாக சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் வரை குறைந்தது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 285.95 புள்ளிகள் குறைந்து 22,533.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 2.28 சதவீதம், 2.32 சதவீதம் சரிவுடன் வர்த்தகமாகின்றன.

துறைவாரியாக, நிஃப்டி வங்கி, நிஃப்டி பொதுத்துறை வங்கி, நிஃப்டி நிதிச் சேவைகள் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தன. அதேநேரத்தில் நிஃப்டி உலோகம், எண்ணெய் & எரிவாயு உள்ளிட்ட துறைகள் உயர்வுடன் வர்த்தகமாகின்றன.

சென்செக்ஸ் 30 பங்குகளில் பவர்கிரிட் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

இஸ்ரேல் - ஈரான் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளதையடுத்து கச்சா எண்ணெய் விநியோகத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் கச்சா எண்ணெயின் விலை 3.36 சதவீதம் உயர்ந்து, ஒரு பேரலுக்கு 114.95 டாலர் என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்து 94.44 என உள்ளது.

Summary

Stock Market: Sensex sinks 990 points, Nifty tests 22,500; bank, financial drag

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.