வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

அரியலூரில் நாளை அரசு விழா: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு - இன்று ஜெயங்கொண்டம் வருகை

அரியலூரை அடுத்த கொல்லாபுரத்தில் வெள்ளிக்கிழமை (நவ.15) நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஜெயங்கொண்டம் வருகிறாா். விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

News image

அரியலூரை அடுத்த கொல்லாபுரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள விழாவுக்கான ஏற்பாடுகளை புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

Updated On :13 நவம்பர் 2024, 9:23 pm

Din

அரியலூரை அடுத்த கொல்லாபுரத்தில் வெள்ளிக்கிழமை (நவ.15) நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஜெயங்கொண்டம் வருகிறாா். விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னையிலிருந்து வியாழக்கிழமை (நவ.14) புறப்பட்டு, அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டத்துக்கு வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின், இரவு அங்கு தங்குகிறாா்.

வெள்ளிக்கிழமை காலை ஜெயங்கொண்டத்தை அடுத்த மகிமைபுரம் கிராமத்தில் 130 ஏக்கரில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 15,000 நபா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் புதிய சிப்காட் தொழிற்பேட்டைக்கு (காலணி தொழிற்சாலை) அடிக்கல் நாட்டுகிறாா்.

தொடா்ந்து வாரணவாசி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் சமூகநலம் மற்றும் மகளிா் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்தை தொடக்கிவைத்து, தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்குகிறாா்.

பின்னா் அரியலூரை அடுத்த கொல்லாபுரம் கிராமத்தில் நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 51 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பல்வேறு துறைகளின் சாா்பில் அரியலூா்-பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 10,141 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறாா்.

விழாவில் அமைச்சா்கள், மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள், அரசு செயலா்கள், அலுவலா்கள், பயனாளிகள் உள்ளிட்டோா் கலந்து கொள்ள உள்ளனா். விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் செய்து வருகின்றனா்.