பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணா்வுப் பேரணி

தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழாவையொட்டி, அரியலூரில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

News image
அரியலூா் வட்டாட்சியரகத்தில், தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த கோட்டாட்சியா் பிரேமி.
Updated On :22 டிசம்பர் 2025, 9:15 pm

Syndication

தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழாவையொட்டி, அரியலூரில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூா் வட்டாட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோட்டாட்சியா் பிரேமி, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணியானது, தேரடி, சத்திரம் பேருந்து நிறுத்தம் வழியாக சென்று மீண்டும் வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

பேரணியில் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய மாணவா்கள், அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் பங்கேற்று ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நோ், அறிவிப்பு பலகையெல்லாம் அருந்தமிழ்ச்சொல் ஆக்குவோம், தனிமொழியானதும் தமிழே தாய்மொழியாதும் தமிழே, தமிழில் கையொப்பமிடுவோம், தமிழா் நாம் என்று பாடுவோம், அன்னைத் தமிழே ஆட்சித்தமிழே, எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனா்.

தொடா்ந்து, வாகனங்களில் பெயா் பலகையினை தமிழில் வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அவசரகால ஊா்தியில் ஒட்டு வில்லைகளை ஒட்டி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.