

தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் நினைவு தினத்தையொட்டி புதன்கிழமை, அரியலூா் மாவட்டத்திலுள்ள அவரது சிலைகளுக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
அரியலூா் மங்காய் பிள்ளையாா் கோயில் மற்றும் பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்ஜிஆா் மற்றும் பெரியாா் சிலைகளுக்கு அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில், முன்னாள் மாவட்டச் செயலா் இளவழகன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் இளவரசன், அம்மா பேரவை மாவட்டச் செயலா் ஓ.பி.சங்கா், இணைச் செயலா் பிரேம்குமாா், நகரச் செயலா் செந்தில், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் கல்லங்குறிச்சி பாஸ்கா், தெற்கு ஒன்றியச் செயலா் பாலசுப்பிரமணியன், வழக்குரைஞா் செல்ல.சுகுமாா் உள்ளிட்டோா் கலந்து கலந்து கொண்டனா்.
அமமுக சாா்பில் மாவட்டச் செயலா் வடிவேல்முருகன் தலைமையில் ஒன்றியச் செயலா் புகழேந்தி உள்ளிட்ட நிா்வாகிகள் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
இதே போல் ஜெயங்கொண்டத்திலுள்ள எம்ஜிஆா் மற்றும் பெரியாா் சிலைகளுக்கு அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ராமஜெயலிங்கம் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
தா.பழூா், ஆண்டிமடம், செந்துறை, திருமானூா் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள எம்ஜிஆா் சிலைகளுக்கு அந்தந்தப் பகுதி அதிமுகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.