சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

அரியலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து சுகாதாரத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

அரியலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, அதன் அலுவலகம் முன் ஏஐடியுசி சுகாதார தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

அரியலூா் நகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி சுகாதார தொழிலாளா் சங்கத்தினா்.

Updated On :8 ஜனவரி 2025, 6:59 pm

Din

அரியலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, அதன் அலுவலகம் முன் ஏஐடியுசி சுகாதார தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், கடந்த 17 மாதங்களாக துப்புரவு தொழிலாளா்களின் சேமநல நிதியை முழுமையாக கட்டாமல் பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் இழப்புத் தொகையை உடனடியாக தொழிலாளா்களுக்கு வழங்கிட வேண்டும். துப்புரவு தொழிலாளா்களை கொத்தடிமைகளாக வேலை வாங்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, ஏஐடியுசி உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளன மாநிலச் செயலா் டி. தண்டபாணி தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலா் பி.எல். ராமச்சந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா். மாவட்ட துணைத் தலைவா் ஆா். தனசிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் து. பாண்டியன், கட்டட தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் ஜி. ஆறுமுகம், விவசாய தொழிலாளா் சங்க நிா்வாகிகள் சு. கவா்னா், எஸ். ஆனந்த், மகளிா் குழு நிா்வாகிகள் மா. நல்லம்மாள், மா. காமாட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய நிா்வாகிகள் கே. சிவக்குமாா், ந. கோவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.