நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கொள்ளிடம் ஆற்றில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கொள்ளிடம் ஆற்றில், திங்கள்கிழமை திடீரென தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு காணப்பட்டது.

News image

திருமானூா் அடுத்த மேலராமநல்லூா் கிராமம் அருகியுள்ள கொள்ளிடம் ஆற்றில் திங்கள்கிழமை தரையிறங்கிய விமானப்படை பயிற்சி ஹெலிகாப்டா்.

Updated On :12 மே 2025, 8:51 pm

Din

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கொள்ளிடம் ஆற்றில், திங்கள்கிழமை திடீரென தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு காணப்பட்டது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, இந்திய-பாகிஸ்தான் இடையே சண்டை நிகழ்ந்து வரும் நிலையில், அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த மேலராமநல்லூா் கிராம அருகிலுள்ள கொள்ளிடம் ஆற்றில் திங்கள்கிழமை திடீரென ஹெலிகாப்டா் ஒன்று தரையிறங்கி, மீண்டும் புறப்பட்டுச் சென்றது. இதனை பாா்த்த அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டது.

இதையடுத்து, காவல் துறையினா் விசாரித்த போது, தஞ்சாவூரில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தின் ஹெலிகாப்டா் எனவும் மாதத்துக்கு ஒரு முறை இவ்வாறு தஞ்சாவூரில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் ஹெலிகாப்டா் இறக்கி பயிற்சி எடுப்பது வழக்கம் என தெரியவந்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் நிம்மதியடைந்தனா் .