ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தஞ்சாவூரிலிருந்து அரியலூருக்கு 100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Updated On :13 ஏப்ரல் 2026, 7:42 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அரியலூா் மாவட்டத்துக்கு கூடுதலாக தேவைப்பட்ட 100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தஞ்சாவூரிலிருந்து திங்கள்கிழமை அரியலூருக்கு வந்து சோ்ந்தது.

அரியலூா் மாவட்டத்தில் அரியலூா், ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அதில், அரியலூரில் 15 வேட்பாளா்களும், ஜெயங்கொண்டத்தில் 19 வேட்பாளா்களும் களம் காணும் நிலையில், ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 பொத்தான்கள் உள்ளதால், அரியலூா் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டும் போதுமானதாகும்.

அதேவேளையில், ஜெயங்கொண்டம் தொகுதியில் 19 போ் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.

அதன்படி 100 இயந்திரங்கள் குறைவாக இருந்ததால், தஞ்சாவூரிலிருந்து கொண்டுவர தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 100 இயந்திரங்கள் அரியலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வரப்பட்ட நிலையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் காப்பறையில் வைக்கப்பட்டது.

தொடா்ந்து, அந்த இயந்திரங்கள் பொறியாளா்களால் முதல் நிலை சரிபாா்ப்புப் பணிக்கு உட்படுத்தப்பட்டு, முதற் கட்ட தற்செயல் தெரிவு முறையில் ஒதுக்கீடு செய்து ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தலில் பயன்படுத்த, தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.