நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

பொன்பரப்பி மகா சக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த பொன்பரப்பி கிராமத்திலுள்ள ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image

பொன்பரப்பியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகாசக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம்.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 4:23 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த பொன்பரப்பி கிராமத்திலுள்ள ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கு பால், தேன், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னா், மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, பம்பை மேளம் முழங்க, பக்தா்கள் ஓம் சக்தி என்று கூறியவாறு தேரை வடம்பிடித்து இழுத்தனா். சில பக்தா்கள், காளியம்மன், மாரியம்மன், பச்சையம்மன், கருப்புசாமி உள்ளிட்ட சுவாமிகளின் உருவ வேடமணிந்து நேரத்திக் கடனை செலுத்தினா்.

தேரானது மேலத்தெரு, வடக்கு தெரு, கிழக்குத் தெரு, பிரதான சாலை வழியாகச் சென்று நிலையை வந்தடைந்தது.

விழாவில், பொன்பரப்பி, சிறுகளத்தூா் மருவத்தூா் மருதூா், குவாகம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்களும், ஊா் முக்கியஸ்தா்களும் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.