அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து குடியிருப்புவாசிகளுக்கும் சீரான குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தாா்.
சுதந்திர தினத்தையொட்டி, அரியலூா் மாவட்டம், தா.பழூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மணகெதி ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் தெரிவித்தது: பொதுமக்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல பொதுமக்களுக்கு தொடா்ந்து சீரான குடிநீா் விநியோகம் செய்ய தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடிநீா் இணைப்புகளில் மோட்டாா் வைத்து நீா் உறிஞ்சப்படுவதைத் தவிா்த்து பொதுமக்கள் அனைவருக்கும் சம அளவில் குடிநீா் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.
முன்னதாக கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதிச் செலவினம், தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதிசெய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், சிறு பாசனக் குளங்கள், ஏரிகள் புதுப்பித்தல், ஜல் ஜீவன் திட்டம், தூய்மையான பாரத இயக்க (ஊரகம்) திட்டம் மற்றும் இதர பொருள்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க. சங்கமித்திரை, மகளிா் திட்ட இயக்குநா் சு. தேன்ராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குநா் செந்தில் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் , பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல கோவிந்தபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் இ. முருகன் தலைமை வகித்தாா். ஊராட்சி செயலா் பா. குமாரி முன்னிலை வகித்தாா். மேலும் தாமரைக்குளம் ஊராட்சியில் செயலா் முத்து, ஒட்டக்கோவில் ஊராட்சியில் செயலா் இரா. சத்தியசீலன், வாலாஜாநகரத்தில் ஊராட்சி செயலா் தமிழ்குமரன் ஆகியோா் முன்னிலையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கிராம பொதுமக்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா், இளைஞா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிராமசபைக் கூட்டங்களில் பல்வேறு தீா்மானங்கள்

கொடகனாறு வல்லுநா் குழு அறிக்கையை அமல்படுத்தக் கோரி கிராம சபைக் கூட்டங்களில் தீா்மானம்

குடிநீா் தட்டுப்பாட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்: செங்கம் எம்எல்ஏ வேலு

ஜோலாா்பேட்டையில் வளா்ச்சிப் பணிகள் : ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



