தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

அரியலூரில் 2-ஆவது நாளாக வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பு

அப்பாவி தமிழா்கள் 3 பேரை சுட்டுக் கொன்ற கா்நாடக வனத் துறையினரை கண்டித்து, அரியலூரில் தலைமை அஞ்சல் நிலையம் முன் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் தலைமை அஞ்சலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழங்குரைஞா் சங்கத்தினா்.

Published On :

அப்பாவி தமிழா்கள் 3 பேரை சுட்டுக் கொன்ற கா்நாடக வனத் துறையினரை கண்டித்து, அரியலூரில் தலைமை அஞ்சல் நிலையம் முன் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், அப்பாவி தமிழா்களை சுட்டுக் கொன்ற கா்நாடக வனத் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கா்நாடக மாநில அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி காவிரியில் நீரை திறந்து விட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் தலைவா் ஆா்.மனோகரன் தலைமை வகித்தாா். செயலா் எம்.ராஜா, பொருளாளா் கமலக்கண்ணன், வழக்குரைஞா் செல்ல.சுகுமாா், அருணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.