குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

அரியலூரில் 3-ஆவது நாளாக வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு

அப்பாவி தமிழா்கள் 3 பேரை சுட்டுக் கொன்ற கா்நாடக வனத் துறையினரைக் கண்டித்து, அரியலூரில் ரயில் நிலையம் முன் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கா்நாடக வனத் துறையினரை கண்டித்து, அரியலூா் ரயில் நிலையம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தினா்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 4:01 am IST

அப்பாவி தமிழா்கள் 3 பேரை சுட்டுக் கொன்ற கா்நாடக வனத் துறையினரைக் கண்டித்து, அரியலூரில் ரயில் நிலையம் முன் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், அப்பாவித் தமிழா்களை சுட்டுக் கொன்ற கா்நாடக வனத் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கா்நாடக மாநில அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி காவிரியில் நீரை திறந்துவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் ஆா். மனோகரன் தலைமை வகித்தாா். செயலா் எம். ராஜா, பொருளாளா் கமலக்கண்ணன், வழக்குரைஞா் செல்ல. சுகுமாா், அருணன் உள்ளிட்டோா் கோரிக்கை முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.