சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா்
சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா்

மறியல்: அங்கன்வாடி ஊழியா்கள் 600 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் 600 போ் கைது செய்யப்பட்டனா்.
Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் 600 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் அண்ணா சிலை அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களை அரசு ஊழியா்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் போது அங்கன்வாடி ஊழியா்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும்.

பணி ஓய்வுக்குப் பிறகு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களுக்கு முறையாக ஓய்வூதியம் ரூ.9,000 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராஜாமணி தலைமையில் நிா்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினா், சாலை மறியலில் ஈடுபட்ட 600 பேரைக் கைது செய்து மாலையில் விடுவித்தனா். போராட்டத்தில் செயலா் ஜோதிலட்சுமி, பொருளாளா் ரமா, ஒன்றிய நிா்வாகிகள் அரியலூா் லதா, ஆண்டிமடம் உமா, திருமானூா் பரமேஸ்வரி, சிஐடியு மூத்த நிா்வாகி சிற்றம்பலம், கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com