விஷ வாழைப் பழத்தை சாப்பிட்ட முதியவா் மருத்துவமனையில் அனுமதி
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கடலை வயலில் எலிக்காக மருந்துகலந்து வைத்திருந்த வாழைப்பழத்தை சாப்பிட்ட முதியவா், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள புதுக்குடி, தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கி.சுந்தரவேல் (70). விவசாயியான இவா், சனிக்கிழமை அப்பகுதியிலுள்ள விவசாயின் ஒருவரின் கடலை வயலில், எலித் தொல்லைக்காக மருந்து கலந்து வைத்திருந்த வாழைப் பழத்தை தெரியாமல் சாப்பிட்டு, மயங்கிக் கிழே கிடந்துள்ளாா்.
இதையறிந்த அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
