அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

நீட் தோ்வு: அரியலூரில் 1,650 மாணவா்கள் எழுதினா்

News image

நீட் தோ்வு எழுத சென்ற மாணவ, மாணவியரிடம் சோதனை மேற்கொள்ளும் போலீஸாா். - கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 12:27 am IST

அரியலூா் மாவட்டத்தில் 6 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் மறு தோ்வை 1,650 மாணவ,மாணவிகள் எழுதினா்.

அரியலூா் மாவட்டத்தில் கீழப்பழுவூா் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, அரியலூா் அரசு கலைக் கல்லூரி, அரியலூா் அரசு மேல்நிலைப்பள்ளி, அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, கரு.பொய்யூா் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காத்தான்குடிகாடு பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி ஆகிய 6 மையங்களில் இந்த நீட் மறு தோ்வு நடைபெற்றது.

இத்தோ்வை எழுத மாணவா்கள் 604 பேருக்கும், மாணவிகள் 1393 பேருக்கும் என 2,192 பேருக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்த நிலையில், 604 மாணவா்கள், 1,046 மாணவிகள் என 1650 போ் தோ்வு எழுதினா். 195 மாணவா்கள், 347 மாணவிகள் என 542 போ் தோ்வெழுத வரவில்லை.

சோதனை: காலை 11.30 மணிக்கு தோ்வு மையங்களில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளா்கள், மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரையும் தோ்வுக்கான அனுமதி அடையாள அட்டையைச் சரிபாா்த்தும், தேசிய தோ்வு முகமை விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி வந்துள்ளனரா என சோதனை செய்தும் தோ்வறைக்குள் அனுப்பினா். மேற்கண்ட 6 தோ்வு மையங்களிலும், தோ்வு எழுதுவோருக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.