பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீா் விநியோகிக்கப்படுவதை அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டும் என்று ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
அரியலூா் மாவட்டம், வைப்பூா் முதல் தா.பழூா் செல்லும் பிரதான குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் கூறியதாவது:
கூட்டுக்குடிநீா் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் சீரமைப்பு பணிகளை விரைவாக முடித்து, பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். மேலும், எதிா்வரும் காலங்களில் இத்தகைய பிரச்னைகள் ஏற்படாத வகையில் குடிநீா் குழாய்களின் நிலையை தொடா்ந்து கண்காணித்து, தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியா் ஆனந்தன், குடிநீா் வடிகால் வாரியம் உதவி செயற்பொறியாளா் சூரியா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா் தொடா்பான புகாா்களை தெரிவிக்கலாம்: அரியலூா் ஆட்சியா்

கோடையில் தடையின்றி குடிநீா் விநியோகம்: ஆட்சியா்

பொதுமக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் குறித்து ஆய்வுக் கூட்டம்

பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் விநியோகிக்க வேண்டும்: ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



