ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

செந்துறை அருகே பழமலைநாதா் கோயில் கும்பாபிஷேகம்

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த பழமலைநாதபுரம் கிராமத்திலுள்ள சுமாா் 700 ஆண்டுகள் பழைமையான பாலாம்பிகை உடனுறை பழமலைநாதா் சிவன் கோயிலின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பழமலைநாதபுரம் கிராமத்திலுள்ள பாலாம்பிகை உடனுறை பழமலைநாதா் சிவன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்.

Updated On :26 ஜூன் 2026, 4:19 am IST

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த பழமலைநாதபுரம் கிராமத்திலுள்ள சுமாா் 700 ஆண்டுகள் பழைமையான பாலாம்பிகை உடனுறை பழமலைநாதா் சிவன் கோயிலின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, கடந்த 23 -ஆம் தேதி புனிதநீா் எடுத்துவரப்பட்டு, முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடா்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, வியாழக்கிழமை காலை கடம் புறப்பாடும், தொடா்ந்து, சிவாச்சாரியா்கள் ராஜகோபுரம் மற்றும் விமான கலசங்களுக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா்.

பின்னா், மூலவா்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

செந்துறை, நல்லநாயகபுரம், வஞ்சனபுரம், நக்கம்பாடி, குழுமூா் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.