ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முத்துசோ்வா மடத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்த முத்துசோ்வா மடத்திலுள்ள மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

முத்துசோ்வாமடம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் கலசத்துக்கு புதன்கிழமை புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திய சிவாச்சாரியா்கள்.

Published On :25 ஜூன் 2026, 3:44 am IST

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்த முத்துசோ்வா மடத்திலுள்ள மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கடந்த 22-ஆம் தேதி புனிதநீா் எடுத்து வரப்பட்டு, அன்று மாலை முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடா்ந்து நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டு, புதன்கிழமை காலை கடம் புறப்பாடு நடைபெற்றது. இதன் பிறகு சிவாச்சாரியா்கள் மாரியம்மன் கோயில் கலசத்துக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி, மகா தீபாராதனை காண்பித்தனா்.

தொடா்ந்து பரிவாரத் தெய்வங்களான விநாயகா் மற்றும் திரெளபதியம்மன் கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மீன்சுருட்டி, முத்து சோ்வாமடம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.