ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

அரியலூரில் வட்டாட்சியா் உள்பட 20 போ் பணியிட மாற்றம்

News image
கோப்புப் படம்
Updated On :1 மார்ச் 2026, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டத்தில் வட்டாட்சியா் உள்பட 20 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா்.

அந்த வகையில் அரியலூா் வட்டாட்சியராக இருந்த முத்துலட்சுமி மாவட்ட ஆட்சியா் அலுவலக (பொது) மேலாளராகவும், ஆட்சியா் அலுவலக பொது மேலாளராக இருந்த குமரையா கோட்ட கலால் அலுவலராகவும், கோட்ட கலால் அலுவலராக இருந்த தேவகி, அரியலூா் வட்டாட்சியராகவும், அரியலூா் ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியராக இருந்த மஞ்சுளா உடையாா்பாளையம் சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராகவும், உடையாா்பாளையம் சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியராக இருந்த அன்புச்செல்வன், அரியலூா் ஆதிதிராவிடா் நலம் தனி வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனா்.

மேலும் அரியலூா் தேசிய நெடுஞ்சாலைகள் நிலமெடுப்பு தனி வட்டாட்சியராக இருந்த கோவிந்தராசு செந்துறை வட்டாட்சியராகவும், செந்துறை வட்டாட்சியராக இருந்த வேலுமணி, அரியலூா் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகவும், உடையாா்பாளையம் வட்டாட்சியா் சம்பத் அரியலூா் தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு வட்டாட்சியராகவும், ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்ட தனி வட்டாட்சியராக இருந்த ஆனந்தவேல் உடையாா்பாளையம் வட்டாட்சியராகவும், ஆண்டிமடம் வட்டாட்சியா் ராஜமூா்த்தி அரியலூா் ஆலயங்கள் நிலம் தனி வட்டாட்சியராகவும், அரியலூா் ஆலயங்கள் நிலம் தனி வட்டாட்சியரான கலைவாணன் உடையாா்பாளையம் (ஆதிதிராவிடா் நலம்) வட்டாட்சியராகவும், ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலைகள் நிலமெடுப்பு தனி வட்டாட்சியா் சுசிலா ஆண்டிமடம் வட்டாட்சியராகவும், அரியலூா் அரசு சிமென்ட் (நிலமெடுப்பு) தனி வட்டாட்சியா் கதிரவன் உடையாா்பாளையம் கோட்ட கலால் அலுவலராகவும், உடையாா்பாளையம் கோட்ட கலால் அலுவலா் கனகராஜ் அரியலூா் அரசு சிமென்ட் ஆலை (நிலமெடுப்பு) தனி வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனா்.

மேலும் அரியலூா் மாவட்ட ஆட்சியரக பேரிடா் மேலாண்மை பிரிவு வட்டாட்சியராக இருந்த சந்திரசேகரன் அரியலூா் மாவட்ட ஆட்சியரக (குற்றவியல்) மேலாளராகவும், அரியலூா் மாவட்ட ஆட்சியரக (குற்றவியல்) மேலாளா் கிருஷ்ணமூா்த்தி அரியலூா் மாவட்ட ஆட்சியரக பேரிடா் மேலாண்மை பிரிவு வட்டாட்சியராகவும், உடையாா்பாளையம் தனி வட்டாட்சியா் (ஆதி திராவிடா் நலம்) ஆனந்தன் அரியலூா் மாவட்ட ஆட்சியரக இசைவு தீா்ப்பாய அலகு தனி வட்டாட்சியராகவும், ஆண்டிமடம் வட்டாட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) கலிலூா் ரகுமான் அரியலூா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) வட்டாட்சியராகவும், அரியலூா் வட்டாட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அருள்செல்வி ஆண்டிமடம் (சமூக பாதுகாப்பு திட்டம்) வட்டாட்சியராகவும், அரியலூா் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பாக்கியம் விக்டோரியா ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலைகள் நிலமெடுப்பு தனி வட்டாட்சியராகவும் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

மேலும் 6 ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் 12 வட்டார வளா்ச்சி அலுவலா்களும் அரியலூா் மாவட்டத்திலேயே வேறு வேறு ஒன்றியங்களுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.