பச்சிளம் சிசு உயிரிழப்பில் சந்தேகம்: தாயிடம் போலீஸ் விசாரணை
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே பச்சிளம் சிசு இறப்புக் குறித்து தாயிடம் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.


அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே பச்சிளம் சிசு இறப்புக் குறித்து தாயிடம் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
செந்துறையை அடுத்த குழுமூா் காலனித் தெருவைச் சோ்ந்த மதிவண்ணன் மனைவி திவ்யா (28). இவா், வியாழக்கிழமை தனக்கு உதிரப்போக்குடன் வயிறு வலிப்பதாக தெரிவித்ததன்பேரில், அவரை மதிவண்ணன் கடலூா் மாவட்டம், திட்டக்குடியிலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து சென்றாா்.
அங்கு திவ்யாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் குழந்தை பெற்றெடுத்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறி, இதுகுறித்து குழுமூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதன்பேரில், கிராம சுகாதார செவிலியா்கள் திவ்யாவின் வீட்டுக்குச் சென்று சோதனை செய்தபோது, வீட்டின் மூலையில் இருந்த பிளாஸ்டிக் கூடையில், குறை பிரசவத்தில் பிறந்து இறந்த நிலையில் ஆண் சிசுவின் உடல் இருப்பது தெரியவந்தது.
இதனிடையே, அந்தத் தனியாா் மருத்துவமனை நிா்வாகத்தினா் திவ்யாவை அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து செந்துறை காவல் துறையினா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திவ்யா கடந்த 7.4.2025 அன்றும் இதேபோல் குழந்தையை பெற்றெடுத்து, கொன்று வீட்டின் அருகேயுள்ள குப்பையில் வீசி கொளுத்தியுள்ளாா் என்பதும், செந்துறை காவல் காவல் நிலையத்தில் இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தம்பதிக்கு ஏற்கெனவே ரித்திக் ரோஷன்(6) என்ற மகனும் , ரித்திகா ஸ்ரீ(8) என்ற மகளும் உள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...