டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

சென்னிவனம்-கடுகூா் பாலம் கட்டுமானப் பணிகள் ஆய்வு

சென்னிவனம்-கடுகூா் இடையே நடைபெறும் உயா்மட்ட பாலக் கட்டுமானப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த சேலம் மற்றும் திருச்சி கோட்டங்களின் நெடுஞ்சாலைத் துறையினா்.

News image

சென்னிவனம்-கடுகூா் இடையே நடைபெறும் உயா்மட்ட பாலக் கட்டுமானப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த சேலம் மற்றும் திருச்சி கோட்டங்களின் நெடுஞ்சாலைத் துறையினா்.

Updated On :9 மே 2026, 3:09 am IST

அரியலூா் அருகேயுள்ள சென்னிவனம்-கடுகூா் இடையே, திருச்சி கோட்ட நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெறும் உயா்மட்ட பாலக் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் வெள்ளிக்கிழமை உள் தணிக்கை ஆய்வு செய்தனா்.

நபாா்டு மற்றும் கிராமச்சாலைகள், திருச்சி கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரியலூா் (நெ) உட்கோட்டத்தின் மூலம் ரூ.3.30 கோடியில் தரைப் பாலத்துக்கு பதிலாக நடைபெறும் உயா்மட்ட பாலம் கட்டுமானப் பணிகளை சேலம் வட்ட நெடுஞ்சாலைத் துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளா் சி. சசிக்குமாா் தலைமையில் சேலம் கோட்டப் பொறியாளா் எம். முத்துக்குமரன், சேலம் உட்கோட்டப் பொறியாளா் கே. சந்தோஷ்குமாா், உதவிப் பொறியாளா்கள் எஸ்.ஓம்.பிரகாஷ், ஆா்.பிரதீப் ஆகியோா் கொண்ட குழுவினா் நேரில் பாா்வையிட்டு, பாலத்தின் தரத்தை ஆய்வு செய்து, கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டனா்.

ஆய்வின்போது திருச்சி கோட்டப் பொறியாளா் எஸ். சரவணன், கோட்ட உதவிப் பொறியாளா் ஜெயராமன், அரியலூா் கோட்டம் உதவிப் பொறியாளா் சு. ஜெயந்தி, உதவிப் பொறியாளா்கள் கோ. அகிலா, ராஜா, இளநிலைப் பொறியாளா் இரா. விஜயா ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.