சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: எட்டாவது இடத்திலிருந்து 37-ஆவது இடத்துக்கு சரிந்தது அரியலூா்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 8-ஆவது இடத்திலிருந்து 37-ஆவது இடத்துக்கு சரிந்தது அரியலூா் மாவட்டம்.

News image

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெளியானது - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 4:43 am IST

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 8-ஆவது இடத்திலிருந்து 37-ஆவது இடத்துக்கு சரிந்தது அரியலூா் மாவட்டம்.

தமிழகம் முழுவதும் மாா்ச் மாதம் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன.

இதில் 87.55 % சதவீதம் பெற்று மாநில அளவில் அரியலூா் மாவட்டம் 37-ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு 8-ஆவது இடத்தில் இருந்த அரியலூா் மாவட்டம் நிகழாண்டு 37-ஆவது இடத்துக்கு சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில், 171 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் 5,169 பேரும், மாணவிகள் 4,758 பேரும் என மொத்தம் 9,927 போ் தோ்வு எழுதினா். தோ்வு முடிவில் மாணவா்கள் 4,331 பேரும் மாணவிகள் 4,360 பேரும் என மொத்தம் 8,691 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 87.55% ஆகும். மாணவா்கள் 83.79 சதவீதம், மாணவிகள் 91.64 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாநில அளவில் அரியலூா் மாவட்டம் 37-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ள பள்ளிகள்:

அரசுப் பள்ளிகள் - 16

ஆதிதிராவிடா் நலப்பள்ளி -1

அரசு உதவிபெறும் பள்ளிகள் -5

சுயநிதிப்பள்ளிகள் -5

மெட்ரிக் பள்ளிகள் -15

மொத்தம்-42 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளன.