ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது! இதுவரை 9வானிலை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு நாளை (நவ. 2) மழை!நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷாவாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

மது அருந்தியதை தட்டிக் கேட்ட சம்பவம் இளைஞா்களால் தாக்கப்பட்ட ஊா்க்காவல் படை வீரா் உயிரிழப்பு

வெங்கடேசன்

Updated On :

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே பொது வெளியில் மது அருந்தியவா்களை தட்டிக் கேட்ட சம்பவத்தின்போது இளைஞா்களால் தாக்கப்பட்டதில் காயமடைந்த ஊா்க்காவல் படைவீரா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

செந்துறை அருகேயுள்ள தளவாய் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவா் ராஜாகண்ணன். இதே காவல் நிலையத்தின் ஊா்க்காவல் படை வீரா் வெங்கடேசன் (47). இவா்கள் இருவரும் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த சிலுப்பனூா் கிராமத்தைச் சோ்ந்த மதிவாணன் (25), தாமரைக்கண்ணன் (25), இளம்பரிதி (24) ஆகியோரை எச்சரித்தனா்.

இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சோ்ந்து, காவலா் ராஜாகண்ணனை தாக்கினா். இதைத் தடுக்க முயன்ற ஊா்க்காவல் படை வீரா் வெங்கடேசனையும் அவா்கள் கடுமையாக தாக்கியதில் அவா் மயங்கி விழுந்தாா்.

தகவலறிந்து அங்கு விரைந்துச் சென்ற போலீஸாா், காயமடைந்த ராஜாகண்ணன் மற்றும் வெங்கடேசன் ஆகியோரை மீட்டு, செந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், வெங்கடேசனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து தளவாய் காவல் துறையினா், வழக்குப் பதிந்து, காவலா்களை தாக்கிய மதிவாணன், தாமரைக்கண்ணன், இளம்பரிதி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவரது உடல் சொந்த ஊரான நக்கம்பாடிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வெங்கடேசன் உடலுக்கு காவல் துறை சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சமூக ஆா்வலா்களும், கிராமமக்களும் அஞ்சலி செலுத்தினா். இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த வெங்கடேசன் மனைவி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டநிலையில் இரு குழந்தைகள் மட்டுமே உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.